கயல் விமர்சனம்
நடிகர்கள்:சந்திரன் , ஆனந்தி , வின்சென்ட்
இயக்குனர் :பிரபு சாலமன்
இசை :இம்மான்
முதலில் வால்பாறையில் என்ற ஊரில் பயணம் தொடர்கிறது
வால்பாறையில் இருந்து பயணம் தொடங்கி சுற்றுலா செல்ல ஆரோனும் சாக்ரடீசும் முதலில் கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கிக்கொண்டு அங்கிருந்து போலீஸ்காரை பார்த்து கிண்டல் செய்வார்கள்.அப்போ எல்லா போலீசுக்காரர்களும் வந்து அந்த இரண்டு பேர்களையும் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்று விசாரணை செய்வார்கள். சந்திரன் நண்பர் கோவை தொழில் அதிபர் ராம்குமார்(பிரபு) போனில் தொடர்பு கொண்டு அவர்களை பற்றி விசாரிக்கிறார்கள் போலீஸ் அதிகாரி.அவர்கள் ஆறு மாதம் வேலை செய்து அடுத்த ஆறு மாதம் ஊரு சுற்றுவார்கள் என்று பிரபு சொன்னார்.அதன் பிறகு பொலிஸிஸ் ஸ்டேஷனில் நடைபெறும் காமடி அருமையாக இருந்தது.மீட்டும் கன்னியாகுமரிக்கு செல்கிறார்கள்.
போகும் வழியில் இருவரும் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்பை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு காதல் ஜோடி மற்றும் சில நபர்கள் இவர்களை கடந்து ஓடிச் செல்கிறார்கள்.ஊரைவிட்டு ஓடிச் செல்லும் அவர்கள் தங்கள் கையில் இருந்து நகை பையை தவறவிடுகிறார்கள்.அதை எடுத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் அந்த காதல் ஜோடியை பின்தொடர்ந்து அவர்களிடம் ஒப்படைகின்றனர்.எந்த கட்சியை காதல் ஜோடியை துரத்தி வருபவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள்.
இருவரும்தான் அந்த காதல் ஜோடி ஊரைவிட்ட ஓட்டிச்செல்ல
உதவியிருக்கார்கள் என்று நினைத்து அவர்களை அடித்து உதைத்து தங்களது இடத்துக்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது ஓடிச் சென்ற பெண் அந்த ஊரின் ஜமீன்தார் வீட்டு வாரிசு என்று.அவரிடம் தாங்கள் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று நண்பர்கள் முறையிடுகிறார்கள்.ஆனால் அவர்களது பேச்சை யாரும் கேட்கவில்லை.
ஜமீன்தார் வீட்டில் வேலை செய்யும் பெண்ணான கதாநாயகி கயல்(ஆனந்தி)இவர்களிடம் சென்று பண்ணையாரின் மகளை பற்றி விசாரிக்கிறாள்.அவளை பார்த்ததுமே அவள் மீது காதல்வயப்படுகிறார் ஆரோன்.ஜமீன்தார் மகளை பற்றி தனக்கு தெரிந்தாற்போல் அவளிடம் காட்டிக் கொள்கிறான்.
இதையெல்லாம் கயல் தான் மறைந்து டேப்ரிகார்ட்டரில் பதிவு செய்து பண்ணையாரிடம் கொண்டு சென்று ஒப்படைகிறாள்.அதில் பதிவு செய்த விஷயம் சந்திரனுக்கு தெரியும்.
ஒருகட்டத்தில் ஆரோன் ஆனந்தியை விரும்புவதாகவும் அவள் தன்னிடம் பேசுவதற்காகத்தான் பண்ணையாரின் மகளை பற்றி தெரிந்தாக கூறியதாக கூறினான்.அனால் அதை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை.
அவனை எரித்து கொன்றுவிட துணிகின்றனர்.அப்போது ஊரை விட்டு ஓடிச்சென்ற பண்ணையாரின் மகள் திரும்பி வந்துவிடுகிறாள்.அவள் வந்துதா ஊரை விட்டு ஓட்டிச்சென்றதுக்கும் ஆரோனுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று சொன்ன பிறகுதான் இருவரையும் ஊரை விட்டு சென்றுவிடும் படி கூறி அனுப்பி விடுகின்றனர்.
இதனால் ஆரோன் மற்றும் சாக்ரடிஸ் அந்த ஊரை விட்டு கன்னியாகுமரிக்கு செல்கிறான்.அவன் சென்றபிறகு அவன் நினைவாகவே இருந்து வருகிறாள் கயல்.இதையறியும் அவளது பாட்டி ஆரோன் கன்னியகுமாரிக்குத்தான் சென்றிருக்கிறான்.அவனை தேடி கண்டுபிடித்து அவனுடனே சேர்ந்து வாழ் என்று செலவுக்கு பணம் கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறாள்.
சந்திரனை தொடர்புகொள்ள எந்த வழியுமே
இல்லாத நிலையிலும் அவனை தேடி புறப்படுகிறாள் கயல்.செல்லும் வழியில் லாரி டிரைவர்
உதவியுடன் கன்னியாகுமரிக்கு செல்கிறாள்.இருவரும் கயல் வருவது தெரியாமல் அவளை தேடி
திரும்பி வருகிறார்கள்.ஜமீன் வீட்டுக்கு வந்து கயலின் பாட்டியிடம் விசாரித்தான்
உன்னை தேடி தான் கன்னியாகுமரிக்கு செல்கிறாள் என்று சொன்னால்.
ஆரோனுக்கு அதை கேட்டதும் சந்தோசத்துடன் திரும்பி இருவரும் செல்கின்றனர்.கயல் போகும் வழியெல்லாம் தன் காதலனைபற்றி பாடல் வரிகளால் கூறிக்கொண்டு போகிறாள்.இறுதியாக இருவரும் கன்னியாகுமரிக்கு சென்றடைந்தனர்.இருவரும் தேடி அலைந்து சோகத்தில் பாடலுடன் தனது காதலியை தேடுகிறான்.கயலை கல்லூரி மாணவிகள் நங்கள் உன் காதலனை கண்டு பிடுத்து சேர்த்து வைக்கிறோம் என்று சொல்ல அவர்களுடன் கயல் ஒருநாள் பொழுதை கழித்தாள் மறுநாள் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஆரோனை பார்த்த சந்தோஷத்தில் ஓடுகிறாள்.
இருவரும் சந்தித்த போது குமரி கடலானது உள்வாங்கி சுனாமி ஏற்பட்டது.சுனாமி நிறைவு பெற்ற நிலையில் ஆரோனை பிணம் என்று நினைத்து பொட்டலம் கட்டி தூக்கி செல்லும் போது கயல் அதனை பார்த்து ஆரோன் என கதறுகிறாள் அந்த சத்தத்தை கேட்டு ஆரோன் கண்விழித்து கயல்........என ஓடி வந்து கட்டி அனைத்து கொள்கிறான்.இருவரையும் கண்ட அவனது நண்பன் ஓடி வந்து கட்டி அனைத்து கொள்கிறான்.
அவர்களது வாழ்க்கையில் இருவர் மட்டுமே என
இருந்த நிலையில் இறுதியில் மூவராக அவர்களது பயணம் தொடர்கிறது.........
No comments:
Post a Comment