நீலகிரி


நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம்[2] இந்தியமாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டாஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள். இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது.



நீலகிரி எனும் மலையின் பெயராலேயே இந்த மாவட்டமும் நீலகிரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்திருப்பது ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகியனவாகும். இவை தவிர்த்து இன்னும் பல இடங்கள் நீலகிரி மாவட்டத்தில் காணவேண்டியவையாக இருக்கின்றன வாருங்கள் நீலகிரி மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வரலாம்.

வரலாறு
மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு, [3] உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.[சான்று தேவை]ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஸ்ட்ரியகூடர், கங்கை, பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரி ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]விஷ்ணுவர்தனா காலத்தில் (கி.பி. 1111-1141) ராஜாக்கள்நிலா மலைகள்என அழைத்துள்ளனர். 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய கம்பனி விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதியில் 1818 வரை பிரிட்டிசாரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன், உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லீவன் [4] கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் காப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன. 1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877இல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள்


ஊட்டி,குன்னூர், கோத்தகிரி,கூடலூர் ஆகிய ஊர்களில் மிகவும் பிரபலமான நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.
கல்லட்டி நீர் வீழ்ச்சி, காட்டேரி அருவி, லாஸ் அருவி, கேத்தரின் நீர்வீழ்ச்சி என நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் இந்திய அளவில் பிரபலமானவையாகும்.
நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா அணை, சாந்தி நல்லா நீர்த்தேக்கம், காமராசர் நீர்த்தேக்கம் ஆகியன முக்கியமான அணைகளாக விளங்குகின்றன.


முதுமலை தேசியப் பூங்கா, யானைகள் புத்துணர்வு முகாம், பைக்காரா, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மலை ரயில் பயணம், படகு ஏரி, பனி ஏரி, தொட்டபெட்டா, சிம்ஸ்பார்க், அரண்மூர் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன என்றே சொல்லலாம்.

10 முக்கிய சுற்றுலாதலங்ள்:
https://youtu.be/LMqkKhmGSPY

எமரால்டு ஏரி, கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, கொடநாடு காட்சி முனையம், டால்பின் மூக்கு, ஜீன்பூல் சூழல் பூங்கா ஆகியவையும் நீலகிரி மாவட்டத்தின் அதிக சுற்றுலா கவனம் ஈர்க்கும் இடங்களாக விளங்குகின்றன.
பழங்களுக்காக நீலகிரி
                    
நீலகிரி மலைப் பகுதி வெறுமனே சுற்றுலாவுக்காக மட்டும் இல்லை என்றே சொல்லலாம். இங்கு பழ விளைச்சல் மிகவும் அமோகமாக இருக்கிறது.
கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மிளகு, சில்வர் ஓக், பாக்கு, காபி, பலா, குரோட்டன்ஸ், மலேயன் ஆப்பிள், ஜாதிக்காய், லிச்சி நாற்றுகள்.பர்லியார் பண்ணை: கிராம்பு, ஜாதிக்காய், ரோஸ் ஆப்பிள், பாக்கு, மணிபிளாண்ட், குரோட்டன்ஸ், சில்வர் ஓக், காபி, துரியன், லவங்கப் பட்டை நாற்றுகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
காட்டேரி பண்ணையின் முக்கிய உற்பத்தி பொருள்களாக ரோஸ்மேரி, ரோஜா மொட்டு செடிகள், அழகு தாவரங்கள், எலுமிச்சை நாற்றுகள், சில்வர் ஓக் உள்ளிட்ட மரக்கன்றுகள் ஆகியவை இருக்கின்றன.
குன்னூர் பழவியல் நிலையம் பலதரப்பட்ட அரிய பழங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறது. எடுத்துக்காட்டாக பிளம், பேரி, ஆப்பிள், மாதுளம் பழ நாற்றுக்கள்.குன்னூர் சிம்ஸ்பூங்கா: மரக்கன்றுகள், சாம்பிராணி, போடோகார்பஸ் போன்ற மரக்கன்றுகள், அழகு தாவரங்கள், மலர் விதைகள் ஆகியவை ஆகும்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதுபோன்ற பல செடிகள் வளர்க்கப்படுகின்றன. ரோஜா செடிகள், அழகு தாவரங்கள், கேக்டஸ் ரகங்கள், மலர் விதைகள்.ரோஜாப் பூங்கா: ரோஜா கன்றுகள், சாம்பிராணி மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள் உள்ளிட்டவை இவற்றில் முக்கியமானவையாகும்.
ஆன்மீக சுற்றுலா
                
  ஊட்டிக்கும் சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் இதமான வானிலையை அனுபவிக்கவே செல்கின்றனர். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல அதிக அளவில் கோவில்களை அங்கு எதிர்பார்க்கமுடியாது. ஆனால் சில கோவில்கள் தமிழக அளவில் புகழ் பெற்று இருக்கின்றன.
சந்தைக்கடை பகுதியில் அமைந்துள்ள ஊட்டி மாரியம்மன் கோவில் அந்த பகுதியில் ஓரளவுக்கு பிரபலமானதாகும்.
மஞ்சக்கம்பையில் அமைந்திருக்கும் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடன் அமர்ந்த காசி விஸ்வநாதர் கோ வில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடன் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில்.





ஊட்டி குதிரைப்பந்தையத் திடல்
                

கோடைக் காலங்களில் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்களுக்கான திடல் இதுவாகும். இது ஊட்டி தொடர்வண்டி நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

Over all Ooty viewing:

மே மாதங்களில் ஆண்டுதோறும் இந்த பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இது ஈர்க்கிறது.
தாவரவியல் பூங்கா
                
பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும்.
அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.
பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.


No comments:

Post a Comment