Monday, 9 September 2019

My Village

                                                      
முத்துப்பட்டி
சிவகங்கை சீமை

                                                                                                             முத்துப்பட்டி 

வீரப்பேரரசி வேலுநாச்சியார்,மா மன்னர் மருது பாண்டியர்களும் வாழ்ந்த சிவகங்கை     சீமையில் முத்துப்பட்டி முக்கிய  கிராமம் ஆகும்.சிவகங்கையிலிருந்து         மதுரைசெல்லும்வலியில் முதல் மற்றும் முக்கிய போக்குவரத்துசாலை உள்ள கிராமம் முத்துப்பட்டி.


காரணம் மக்களின் எண்ணிக்கை ,விவசாய வளர்ச்சி,கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி என அனைத்தையும் கொண்டுள்ளது.மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ள சிறப்பு மிக்க கிராமம்.

எங்க ஊரு திருவிழா✨                         
எங்கள் கிரமத்தின் முக்கிய சிறப்பு ஆடி மாத முளைப்பாரி திருவிழா மிக விமர்த்தியாக நடைபெரும்.

வருடம் ஒரு முறை வரும் திருவிழாவை சிறப்பாக நடத்துவது கிராம வழக்கு.விழாவின் முக்கிய தெய்வமான வீரமகாளி அம்மனுக்கு பால் குடம் எடுப்பது மற்றும் முளைப்பாரி எடுப்பது கிராமத்தை அழகு படுத்தும்



திருவிழா கொண்டாட்டம்
ஆடி மாதம் முதல் அல்லது இரண்டாம் செவ்வாய் திருவிழா ஆரம்பிக்கும்.முதல் வாரம் செவ்வாய் காப்பு கட்டப்படும்.அன்று கிராமத்திற்கு சில கட்டுப்பாடு விதிக்கப்படும்.திருவிழா முடியும் வரை வெளியில் தங்குவது, அசைவம் சமைப்பது மற்றும் காப்பு கட்டிவர்களுக்கென சில கட்டுப்பாடு உண்டு.
இரண்டாம் செவ்வாய் முளைப்பாரி காப்பு கட்டப்படும். அன்று பக்கத்து ஊரில் உள்ள வீரமாகாளி அம்மனுக்கு பால் குடம் எடுப்பர்.அன்று மேல தாலத்துடன் முத்துப்பட்டியிலிருந்து அருகில் உள்ள பொன்னாகுளத்தில் உள்ள வீரமாகாளி அம்மனை வளிபட செல்வார்கள்.அங்கு வழிபட்ட பிறகு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.அன்ன தானம் முடிந்த பிறகு ஆட்டம் பாட்டத்தோடு ஊர் திரும்புவார்கள்.






ஊரில் காப்பு கட்டிய பிறகு அடுத்த வாரம் செவ்வாய் கிழமை திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.அதற்கு இடைப்பட்ட 6 நாட்களில் ஊர் மந்தையில் தினமும் ஆண்களும் பெண்களும் கும்மி கொட்டுவது திருவிழாவை அழகு படுத்தும்.


                                                                                                                                முத்துப்பட்டி மந்தை


கும்மி கொட்டிய பிறகு இளைஞர்களின் வீர விளையாட்டான இளவட்ட கல் தூக்குவது நடைபெறும்.கிராமத்து இளைஞர்கள் அவர்களின் வீரத்தை காட்டுவார்கள்.

ஆறாம் நாள் தங்க மொழம்பு என்று அழைப்பார்கள்.ஏழாம் நாள் திருவிழா ஆரம்பிக்கும்.அன்று அனைவர் வீட்டிலும் அசைவ விருந்து தடபுலாக இருக்கும்.அன்று காளை மாளை இரு வேளையும் மாட்டு வண்டி பந்தையம் நடை பெறும்.



அன்று இரவு முளைப்பாரி தூக்கிக்கொண்டு மக்கள் மந்தையை மூன்று முறை வளம் வருவர்.பிறகு பாரியை இரக்கி கோயிலில் இரக்கி வைத்து விடுவார் கள்.அதன் பின்பு வல்லி திருமனம் நாடகம் நடைபெரும்.


 அடுத்த நாள் காலையில் மீண்டும் மக்கள் பாரியை தூக்கிக் கொண்டு ஊரை வலம் வருவார்கள்.பாரிக்கு முன்பு மேலத்தோடு சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை ஆடிக் கொண்டே வருவார்கள்.


கிராம மக்கள் அனைவரும் பாரியை தூக்கிக்கொண்டு ஊரில் உள்ள தெப்ப குளத்திர்க்கு வருவார்கள்.அங்கு பாரி அனைத்தையும் ஆண்கள் எடுத்துக் கோண்டு தெப்பத்தில் அமிழ்த்தி கரைத்தி விடுவார்கள்.


அன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.மீண்டும் மாலை சைக்கிள் பந்தயம் நடைபெறும்.ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் நடைபெறும்.அன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.அருகில் உள்ள கிராமத்து மக்களும் வந்து கண்டு மகிழ்வர்.

ஆண்டு தோரும் சிறப்பாக நடை பெறும் எங்க ஊரூ திருவிழா.விழா முடிந்த பிறகு இரண்டு நாள் வெருச்சோடி காணப்படும்.அந்த வாரம் முழவதும் முடிந்த திருவிழாவை பற்றி பேசி மகிழ்வது உண்டு.அந்த தித்திக்கும் திருவிழா வரும் அடுத்த ஆண்டிற்காக காத்திருப்போம்.


No comments:

Post a Comment