Sunday, 8 September 2019

தீரன் அதிகாரம் ஒன்று


தீரன் அதிகாரம் ஒன்று

இப்படி ஒரு போலிஸ் அதிகாரியா?

            இதற்குமுன் எத்தனையோ போலிஸ் திரைப்படங்களை பார்த்திருந்தாலும் இந்த படம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. ஏனெனில் இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மற்றுமொரு காரணம் இப்படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள் கதைக்கேற்றவாறு கச்சிதமாக பொருந்தியுள்ளன. எனது கண்ணோட்டத்தில் தீரன் அதிகாரம் ஒன்று…


நடிகர்கள் – கார்த்தி, ரகுல் ப்ரீத், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர்.
இயக்குநர் – வினோத்
இசை – ஜிப்ரான்

       இதில் கார்த்தி நேர்மையான போலிஸ்(டி.எஸ்.பி) அதிகாரியாக கலக்கியுள்ளார். ரகுல் ப்ரீத்தும் தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். பல படங்களில் வில்லனாக நடித்த போஸ் வெங்கட் இதில் கார்த்தியுடன் போலிஸ் அதிகாரியாக சேர்ந்து நடித்து மேலும் விருவிறுப்பைக் கூட்டியுள்ளார். பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்துமாறு வில்லனாக அபிமன்யு சிங் நடித்துள்ளார். மேலும் வினோத்தின் இயக்கமும் ஜிப்ரானின் இசையும் சேர்ந்து இப்படத்தை சூப்பர்ஹிட் திரைப்படமாக வெளிப்படுத்தியுள்ளது.
         கதையின் தொடக்கத்தில் கார்த்தி போலிஸ் ட்ரெயினிங் முடித்துவிட்டு தேர்ச்சிப்பெற்று வீடு திரும்புகிறார். இங்கு ஏற்கனவே ரகுல் ப்ரீத் அவரை விரும்பிக்கொண்டிருக்கிறார். கண்டதும் காதல் பேசியதும் காதல் சிரித்ததும் காதல் வருவது போல கார்த்திக்கு பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. இதற்கிடையில் ரகுல் ப்ரீத் தனது குறும்புத்தனத்தின் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பையே தேர்ச்சி பெறாமல் பல வருடம் படித்துவருகிறார். தன்னை விரும்புவதை அறிந்த கார்த்தியும் அவரை விரும்புகிறார். இவ்வாறு சிறுசிறு சண்டைகளுடன் இருவரின் காதல் காட்சியும் பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது. இறுதியில் திருமணத்தில் முடிகிறது.


       பிறகு தனது நேர்மையின் காரணமாக பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். கடைசியாக திருவள்ளுர் மாவட்டத்திற்கு டி.எஸ்.பியாக வருகிறார்.  இதற்கிடையில் வடமாநிலத்தைச்சேர்ந்த கொல்லைக்காரன் பல வீடுகளில் புகுந்து மக்களை மிருகத்தனமாக சாகடித்தும் நகைகளை கொல்லையடித்தும் செல்கிறான். இக்காட்சி பார்ப்போரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.  இந்த கேஸ் நமது கார்த்தியிடம் வருகிறது. விசாரணை செய்யும் போது இதேபோல் பல இடங்களில் நடந்திருப்பது தெரியவருகிறது. தடயமாக கைரேகையை மட்டும் வைத்து விசாரணையை தொடர்கிறார் கார்த்தி. தனது டீமுடன் இந்தியா முழுவதும் தேடுகிறார். இதோடு படத்தின் ப்பஸ்டு ஹால்ப் முடிவடைகிறது. இதற்க்குபின் கார்த்தி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை இயக்குநர் வினோத் விறுவிறுப்பாக கொண்டுச்சென்றுள்ளார்.


            ஒருநாள் அதே கும்பல் எம்.எல்.ஏ வையும் கொலைசெய்து கொல்லையடித்தும் அதை தொடர்ந்து போஸ் வெங்கட்டின் குடும்பமும் கார்த்தியின் மனைவியும் தாக்கப்படுகின்றன. இதில் மனைவி ரகுல் ப்ரீத் கோமாவிற்கு செல்கிறார். தன் கடமையின் காரணமாக மனைவியைவிட்டு அந்த கொல்லைக்காரனை தேடிச்செல்கிறார். இக்காட்ச்சி பார்ப்போரை மனமுருகச்செய்கிறது. தற்ப்போது உள்ள சூழலில் போலிஸின் மீது மிகுந்த மரியாதையை ஏற்ப்படுத்தியுள்ளார். பல வருடத்தேடலுக்குபின் கார்த்தி அந்த கும்பலின் தலைவனையும் மற்றவர்களையும் கண்டுபிடிக்கிறார். அதற்க்குபின் அந்த கூட்டத்தைச் சேர்ந்த இருவரை கார்த்தி கைது செய்கிறார்.


            இதில் எனக்கு மிகவும் பிடித்தக்காட்ச்சி அந்தக்கூட்டத்தைச் சேர்ந்த பன்னே சிங் என்பவனை கைது செய்வது. ஏனெனில் அந்த பஸ் ஸ்டென்ட் காட்ச்சி அருமையாக இருந்தது. கார்த்தி தன்னை நெருங்கி வருவதை அறிந்த வில்லன் திட்டம் செய்து தன்னிடம் வருமாறு செய்கிறான். அதன்படி தனது டீமுடன் வில்லனை துரத்திச்செல்கிறார். அவ்வாறு செல்லும்போது ஒரு ஆடு மேய்க்கும் பெரியவரை சந்திக்கின்றன. அனைவரும் அவரின் கிராமத்திற்கு செல்கின்றன. செல்லும் வழியில் சிறிய நகைச்சுவை காட்சியையும் வைத்துள்ளார் இயக்குநர் வினோத். கடைசியாக வில்லனின் திட்டம் முறியடிக்கப்பட்டு அவனை துரத்திச்செல்கிறார் கார்த்தி. இருவருக்குமிடையில் சண்டை நடக்கிறது. சண்டையில் வில்லன் அபிமன்யு சிங் கொல்லப்படுகிறான்.
          இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. எனது வருத்தம் என்னவெனில் இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்காமல் மாறாக பணிமாற்றம் மற்றுமே கிடைத்தது.
            அதைத்தவிர காதல் காட்சி, பாடல்கள், சண்டைக்காட்சி என அனைத்தையும் சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குநர் வினோத். இப்படத்தின் மூலம் கனவன் மனைவி இருவருக்கிடையிலுள்ள அன்பு மற்றும் புரிதல் மற்றும் நேர்மையான அதிகாரியின் கடமையுணர்வு என காட்டி என்னை மட்டுமல்ல அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார் இயக்குநர்…
                                                                                                                                                          
Click to Audio download:
https://www.masstamilan.org/theeran-adhigaram-ondru-songs  
Click to video download:
http://tamilhdvideos.net/site_theeran_adhigaaram_ondru_hd_videos_songs.xhtml
Click to download full movie:
குறிப்பு :  
          இது எந்த பதிவிலிருந்தும் எடுக்கப்பட்டதல்ல. சுயமாக எழுதப்பட்ட கருத்து. உங்களின் கருத்தை கீழே Command Box-ல் பதிவிடவும். எங்களின் புதுபுது Update-களை பெற 👉👉Subscribe செய்யவும்.. 

                                                                           நன்றி🙏
           
                                                               

No comments:

Post a Comment