மிசோரம்
இந்தியாவின்
வடகிழக்கு
மாநிலங்களுள்
ஒன்று.
அய்சால்
இம்மாநிலத்தின்
தலைநகர்.
மீசோ
பழங்குடி
இன
மக்கள்
இங்கு
பெரும்பான்மையாக
வசிக்கின்றனர்.
மிசோ
மொழி
அதிகாரப்பூர்வ
மொழி.
இம்மாநிலத்தின்
பெரும்பான்மையான
மக்கள்
கிறித்தவர்கள்.
மிசோரம்
மாநில
மக்களின்
கல்வியறிவு
விகிதம்
91.33%.
கேரளத்துக்கு
அடுத்தபடியாக
அதிக
கல்வியறிவு
உள்ள
மாநிலம்
இது.
மிசோரம்
மாநிலத்தின்
மக்கள்
தொகை
சுமார்
1,097,206
. இந்த மாநிலத்தை
திரிபுரா,
அசாம்,
மணிப்பூர்
ஆகிய
மாநிலங்கள்
சூழ்ந்துள்ளன.
இந்த
மாநிலம்
வங்காளதேசம்,
மியான்மர்
ஆகிய
நாடுகளுடன்
சுமார்
722
கி.மீ
நீளத்துக்கு
எல்லையை
கொண்டுள்ளது.
மிசோராமின் வரலாறு
மிசோரம்
1950 களில் அசாம்
மாநிலத்தின்
ஒரு
பகுதியாக
இருந்தபோது
மிசோராமின்
வரலாறு
என்பது
வடகிழக்கு
இந்தியாவின்
தொலைதூர
பகுதியிலுள்ள
மிசோராம்
மாநிலத்தின்
வரலாறைக்
குறிக்கிறது.
மேலும்
இது
பர்மாவின்
சின்
மாகாணத்திலிருந்து
குடிபெயர்ந்த
சின்
மக்களில்
பல
இனக்குழுக்களின்
வரலாறும்
ஆகும்.
ஆனால்
மேற்குப்
புலப்
பெயர்வு
குறித்த
தகவல்கள்
வாய்மொழி
வரலாறு
மற்றும்
தொல்லியல்
கூற்றுகளின்
அடிப்படையில்
அமைந்திருக்கின்றன.
இதன்
பதியப்பட்ட
வரலாறானது
அண்மையில்
அதாவது
19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில்,
பிரித்தானியரால்
கைப்பற்றப்பட்ட
காலகட்டத்தில்
இருந்து
தொடங்குகிறது.
இப்போது
இப்பகுதியானது
சின்
மலை
மற்றும்
வங்காளதேச
மக்களுடைய
கலவையாக
உள்ளது.
அதன்
வரலாறானது
லுசிஸிய,
ஹார்,
லாய்,
மாரா,
சக்மா
போன்ற
பழங்குடியினரை
பெரிதும்
பிரதிபலிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின்
நடுவில்
சமயம்,
அரசியல்
மற்றும்
கலாச்சாரப்
புரட்சிகளைத்
தொடர்ந்து,
பெரும்பான்மையான
மக்கள்,
ஒரு
பெரும்
பழங்குடி
இனத்தவராக,
மிசோவிற்குள்
ஒருங்கிணைக்கப்பட்டனர்.
மிசோராம்
குறித்த
துவக்கக்
கால
ஆவணப்
பதிவானது
1850
களைச்
சேர்ந்த
பிரித்தானிய
இராணுவ
அதிகாரகளால்
செய்யப்பட்டவை
ஆகும்.
மிசோ
பழங்குடிகளின்
இடைவிடாத
தாக்குதலின்
விளைவாகவும்,
அதனால்
ஏற்பட்ட
மனித
உயிரிழப்புகளின்
காரணமாகவும்,
பிரித்தானிய
ஆட்சியாளர்கள்
பழங்குடிகளை
அடக்கி
அடிமைப்படுத்த
நிர்பந்திக்கப்பட்டனர்.
1871
மற்றும்
1889
ஆம்
ஆண்டுகளில்
நடத்தப்பட்ட
பிரிட்டிஷ்
இராணுவப்
படையெடுப்புகளால்
முழுமையாக
லுஷாய்
மலைகள்
இணைத்துக்
கொள்ளப்பட்டது.
1947
ஆண்டின்
இந்திய
சுதந்திரத்திற்குப்
பிறகு,
இப்பகுதி
அசாம்
மாநிலத்துக்கு
உட்பட்ட
லுஷாய்
மலைகள்
மாவட்டமாக
ஆக்கப்பட்டது.
1972
ஆம்
ஆண்டில்
இந்த
மாவட்டமானது
ஒன்றியப்
பகுதியாக
அறிவிக்கப்பட்டது.
மேலும்
இப்பகுதியின்
பெயர்
மிசோரம்
என்று
கலாச்சார
ரீதியாக
பெயரிடப்பட்டது.
1986
இல்
மிசோரம்
இந்திய
ஒன்றியத்தின்
கூட்டாட்சிக்கு
உட்பட்ட
ஒரு
மாநிலமாகமாறியது.
பொருளடக்கம்
அரசியல்
மக்கள் தொகை
அரசியல்
மக்கள் தொகை
a.
சமயம்
b.
மொழிகள்
c.
திருவிழாக்கள்
d.
பயணம்
ஆட்சிப் பிரிவுகள்
கல்வி
கல்வி
தட்பவெப்ப நிலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அரசியல்
மிசோரத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது. லால் தன்ஃகாவ்லா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. நிர்பய் சர்மா ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மிசோரம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,097,206
ஆக உள்ளது.
அதில் பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,036,115 (95%) ஆக உள்ளது.
கிராமப்புறங்களில் 47.89% மக்களும், நகரப்புறங்களில் 52.11%
மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011)
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.48% ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகையில் 555,339 ஆண்களும் மற்றும் 541,867 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். 21,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 52 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர்களின் எண்ணிக்கை 848,175 ஆக உள்ளது. சராசரி படிப்பறிவு 91.33 % ஆகவும், அதில் ஆண்களின் படிப்பறிவு 93.35 % ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 89.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,531 ஆக உள்ளது.
மக்கள் தொகையில் 555,339 ஆண்களும் மற்றும் 541,867 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். 21,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 52 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர்களின் எண்ணிக்கை 848,175 ஆக உள்ளது. சராசரி படிப்பறிவு 91.33 % ஆகவும், அதில் ஆண்களின் படிப்பறிவு 93.35 % ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 89.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,531 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 30,136
(2.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 14,832
(1.35 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 956,331
(87.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 376
(0.03 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 93,411
(8.51 %) ஆகவும், சீக்கிய சமயமக்கள் தொகை ஆகவும் 286
(0.03 %) பிற சமயத்து மக்கள் தொகை 808
(0.07 %) ஆகவும் மற்றும் சமயம்குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,026
(0.09 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன், இந்தி மொழி, மற்றும் மிசோ மொழி போன்ற வட்டார பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது.
திருவிழாக்கள்
• அந்தூரியம் திருவிழா
• சப்சார் குட் திருவிழா
பயணம்
மிசோரம் உள் நுழைவதற்கு ILP(Inner line Permit) எனும் அனுமதியை இம்மாநில அரசு வழங்குகிறது.
ILP பெறாமல் அடுத்த மாநிலத்தவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. தரைவழி பயணிப்பவர்கள் கவுகாத்தியில் உள்ள மிசோரம் ஹவுஸிலும் (Miozram
House), விமானம் வழியாக பயணிப்பவர்கள் லெங்க்புய் விமான நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அரசு வழங்கியுள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு புகைபடம் போதும்.
லெங்புய் விமான நிலையம் மிசோரம் மாநில தலைநகரான ஐசோலிலிருந்து சுமார் 30
கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கல்கத்தா, டெல்லி, குவஹாத்தி மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு தினமும் விமான சேவை அளிக்கப்படுகிறது. மேலும் சம்பாய்,சைஹா மற்றும் கமலா நகர் ஆகிய மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையும் அளிக்கப் படுகிறது.
தரைவழியாக பயணிக்க விரும்புகிறவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி வரை ரயிலில் பயணம் செய்து அதற்கு பின் பேருந்து அல்லது சுமோ மூலமாக பயணத்தை தொடரலாம்.
கல்வி
மிசோவின் முன்னோர்கள் எந்த எழுத்து முறையையும் கொண்டிருக்கவில்லை, அவர்களின் தொல் வழிபாட்டின் அடிப்படையில் இயற்கை சார்ந்த அனைத்துதையும் வணங்கினர். பிரித்தானியர் அவர்களை திறமையாக நிர்வாகம் செய்ய வசதியாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் கிறித்துவத்துவத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. இதற்கு தெளிவான தீர்வாக கிறித்தவ மறை பணிகளை ஊக்குவிப்பது என்றானது. லுஷாய் மலைப் பகுதிக்கு முதலில் வந்த மறை பணியாளர் வில்லியம் வில்லியம்ஸ் ஆவார்.
சுற்றுலா அம்சங்கள்
சுற்றுலா அம்சங்கள் சோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பலா ஏரி,
டம் டில் ஏரி அல்லது கடுகு ஏரி போன்றவற்றை குறிப்பிடலாம். இம்மாநிலத்தின் தலைநகரான அய்சால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
மலைக்குகை
மலைக்குகை ‘மிசோரம்'
பகுதியின் வரலாற்று பின்னணி குறித்த சில தகவல்களை அளிக்கும் சான்றுகளாக பல மலைக்குகை ஸ்தலங்களும் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.
தம்பா காட்டுயிர் சரணாலயம்
தம்பா காட்டுயிர் சரணாலயம் தம்பா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கான்குலுங் சரணாலயம் போன்றவை இம்மாநிலத்தின் இதர முக்கியமான சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் மிசோரம் மாநிலத்தை மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் என்றும் கூறலாம். இங்குள்ள பான்பூய் மலைகள் மலையேற்றத்துக்கு பொருத்தமான பாதைகளை கொண்டுள்ளன.
கான்க்லங் வனவிலங்கு
சரணாலயம்
கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.
ருங்டில் ஏரி
ருங்டில் ஏரி அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14
கி.மீ தூரத்தில் இந்த கம்பீரமான ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரிஅமைந்திருக்கிறது. 2.5
ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பியுள்ளன. ஒரு காலத்தில் இந்த ஏரி ஸ்தலத்தில் ஏராளமான கௌதாரி பறவைகள் வசித்திருந்தன. இன்றும்கூட பறவை ரசிகர்கள் இந்த ஏரிப்பகுதியில் பலவகையான பறவைகளை பார்த்து மகிழலாம்.
முரா புக் மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6
குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது. முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு வருமாம். பின் அவர்களை தன் கூரிய அலகுகளால் கொத்தித் தின்றும் விடுமாம்.
No comments:
Post a Comment